tamilnadu

img

கொரோனா தடுப்புக்கு ரூ.1.70 லட்சம் கோடி உதவிகள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டி

புதுதில்லி, மார்ச் 26- கொரானோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழு வதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. 20 நாட்க ளுக்கும் மேலாக வீட்டிலிருக்கும் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அரசியல் கட்சி களின் தலைவர்களும் வலியுறுத்தி னர்.  இதனையடுத்தே, கூலித் தொழி லாளர்கள் உள்ளிட்டோருக்கு மத் திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரி வித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: கூலித் தொழிலாளர்கள் உள் ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப் படும். நாடு தழுவிய ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வித வைகள், ஓய்வூதியம் பெறுபவர் களுக்கு ஜன்தன் யோஜனா திட் டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும். விவசாயிகள் முதற்கட்டமாக தலா 2 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கு களில் பெறுவர்.  சுமார் 8.7 கோடி விவ சாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட் டத்தில் ஐந்து கோடி பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கு களில் செலுத்தப்படும்

மூத்தகுடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய் இரண்டு தவணைகளில் வழங்கப்படும். வங்கிகளில் ஜன்தன் கணக்குகள் வைத்திருக்கும் பெண் களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும். யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவி கள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும். வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம், உணவில்லா மல் யாரும் பாதிக்கப்படாத நிலை ஏற்படும். இந்த திட்டங்களின் அடிப்ப டையில், பொருட்கள் 2 தவணை யாக வழங்கப்படும்.

மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகா தாரப்பணியாளர்கள், துப்புரவு பணி யாளர்களுக்கு முதலில் உதவிக் கரம் நீட்ட மத்திய அரசு முன்வந்துள்ளது.  கொரோனாவுக்கு எதிராக போரிடும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர் களுக்கு ரூ.50 லட்சம் அளவிற்கு மருத்துவ காப்பீடு எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடி யாக 2000 ரூபாய் வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர். பதிவு செய்த 3.5 கோடி கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் களுக்கு நிவாரணம் வழங்க  அவர் களின் நல நிதியை (ரூ .31,000 கோடி) பயன்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப் பித்துள்ளது. 100 நாள் வேலை திட் டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த் தப்படும்.

உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற சுமார் 8 கோடி குடும்பத்திற்கு 3 சிலிண்டர்கள் இல வசம். மகளிர் சுய உதவிக்குழுக்க ளுக்கு அடமானம் எதுவும் இல்லா மல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். முதலாளி மற்றும் பணியாளர் ஆகிய இரு நிறுவனங்க ளின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) பங்களிப்பை இந்திய அரசு செலுத்தும், இது 24 சதவீத மாக இருக்கும், இது அடுத்த 3 மாதங்களுக்கு இருக்கும்.

வருங்கால வைப்பு நிதியில் 75 சத வீதம் திரும்பியளிக்கத்தேவை யில்லாத தொகையை பெற்றுக்கொள் ளும் வசதியின் மூலம் 4.8 கோடி ஊழி யர்கள் பலனடைவர் என்று தெரிவித் தார். 

நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், 80 கோடி மக்களுக்கு அடுத்த 3 மாதத் திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத் திற்கும் அடுத்த 3 மாதத்திற்கு தலா 1 கிலோ பருப்பு விலையில்லாமல் வழங்கப்படும் என்றார்.

;